டாஸ்மாக் கடை எதிரில் பச்சிளம் குழந்தை வீசிய தாய்- கள்ளக்காதலனுக்கு பிறந்ததால் விட்டுசென்றதாக வாக்குமூலம்
Top Tamil News May 12, 2026 10:48 PM

ஆம்பூர் அருகே பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை டாஸ்மாக் கடை அருகில் வீசி விட்டு சென்ற தாயை பொதுமக்கள் பிடித்து  காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே இன்று ஆட்டோ ஒன்றில் கை குழந்தையுடன் வந்து இறங்கிய இளம் பெண் தனது குழந்தையை சாலையில் கிடத்திய நிலையில் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி செல்ல முயன்றுள்ளார். தனை பார்த்த பொதுமக்கள் சம்மந்தப்பட்ட பெண்ணையும் ஆட்டோ ஓட்டுனரையும் மடக்கி பிடித்து குழந்தை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உம்ராபாத் காவல் துறையினர் குழந்தையை மீட்டு சம்மந்தப்பட்ட பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையின் விசாரணையில் வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி என்பதும், இவருக்கு ஏற்கனவே மணிகண்டன் என்பவரோடு திருமணமாகி குடும்பப் பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோபி என்பவருடன் பழகி வந்ததாகவும் தவறான பழக்கம் காரணமாக பிறந்த குழந்தை என்பதால் இளம் குழந்தையை கைவிட முயற்சி செய்து சிக்கியுள்ளார் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ல்வேறு வேண்டுதல்களை செய்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் பல தம்பதியினர் அவதிப்பட்டு வரும் நிலையில பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயை வீசி வட்டுச் சென்ற சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.