கடைசி நிமிடத்தில் நடந்த அந்த ரகசிய நியமனம்! “அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொடுத்த விஜய்”… நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் முதலமைச்சர் விஜய் போட்ட ஸ்கெட்ச்..!!
SeithiSolai Tamil May 12, 2026 10:48 PM

தமிழகச் சட்டமன்றத்தில் நாளை (மே 13) நடைபெறவுள்ள தவெக அரசு மீதான மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியாகப் புதிய நியமனங்களை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், விருகம்பாக்கம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் ‘அரசு கொறடா’வாக (Government Whip) நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் சலுகைகளும் வழங்கப்படவுள்ள இந்தத் பதவியானது, சட்டப்பேரவையில் கட்சி உறுப்பினர்களை ஒருமுகப்படுத்தவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் மிக அவசியமானதாகும்.

நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், சபரிநாதனின் நியமனம் தவெக தரப்பில் ஒரு ‘மாஸ்டர் பிளான்’ ஆகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, வாக்கெடுப்பில் எந்தவிதச் சிக்கலும் ஏற்படாமல் இருக்கத் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் முதலமைச்சர் விஜய் தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வெற்றிக் கனியைப் பறிக்கத் தேவையான வியூகங்களை வகுக்கும் இந்தப் பேச்சுவார்த்தை, கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.