Sivakarthikeyan: வேலும் மயிலும்.. புது இன்டீ பாடலை தயாரித்திருக்கும் சிவகார்த்திகேயன் – ப்ரோமோ வீடியோ இதோ!
TV9 Tamil News May 12, 2026 11:48 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படமானது கடந்த 2026 ஜனவரி மாதத்தில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் புது புது படங்களை தயாரித்துவருகிறார். இவரின் தயாரிப்பில் இறுதியாக ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி (Thaai Kizhavi) என்ற படமானது வெளியாகியிருந்தது. இதையடுத்ததாக அறிமுக இயக்குநரை வைத்து புது படத்தையும் தயாரித்துவருகிறார். அந்த வகையில், இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் புதிய இன்டீ பாடல் ஒன்றை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

வேலும் மயிலும் (Velum Mayilum) என்ற இன்டீ பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுத, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த வீடியோ பாடலை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளாராம். இந்த பாடலானது நாளை 2026 மே 13ம் தேதியில் வெளியாகும் என்ற நிலையில், இன்று இதன் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய வரலாற்றிலே முதல்.. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருதை வென்ற நடிகை ரோஜாவின் மகள்!

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலும் மயிலும் இன்டீ பாடல் புரோமோ வீடியோ:

Our first indie #VelumMayilum #வேலும்மயிலும் 🦚🙏https://t.co/3YEGhZrX00

Lyrics by our dear @Siva_Kartikeyan ✍🏻
Composed & sung by @nivaskprasanna 🎶
Conceived & directed by @Dir_SivakumarM 🎬

From tomorrow, 5 PM 🕔

Stay tuned to https://t.co/reV2bji77k pic.twitter.com/AdutM7Iz5V

— Sivakarthikeyan Productions (@SKProdOffl)

வேலும் மயிலும் என்ற இன்டீ பாடல்தான் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் முதல் இன்டீ பாடலாகும். இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ள நிலையில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார். அந்த வகையில் இந்த பாடலின் [புரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. அந்த விதத்தில் இதன் முழு பாடல் வரும் 2026 மே 13ம் தேதியில் மாலை 5 மணியளவில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் கருப்பு பட FDFS காட்சிகள் எப்போது திரையிடப்படும்? – விவரங்கள் இதோ!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இந்த படமானது விருமாண்டி சாமி மற்றும் முருகனுக்கு இடையே உள்ள கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறதாம். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படமானது வரும் 2026 ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.