கருப்பு படம்: நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது 45-வது படமாக வெளியாக உள்ளது கருப்பு படம். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து உள்ளார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு பணிகளை விறுவிறுப்பாக செய்து வந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் நாளை 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டென்று மாறுது வானிலை படம்: நடிகர் ஜெய் நாயகனாக நடித்து தற்போது உறுவாகி உள்ளது சட்டென்று மாறுது வானிலை படம். இயக்குநர் பாபு விஜய் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர்கள் மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமீபத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் வருகின்ற 15-ம் தேதி தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… AA23 படம் லோகேஷின் ஒரு கனவுத் திட்டம்.. இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்த தகவல்!
கரா படம்: இயக்குநர் அவதார் எழுதி இயக்கி நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்து உள்ள படம் கரா. இந்தப் படத்தில் நடிகர்கள் சாஹிபா பாசின், ஜீவா தங்கவேல், கிமாயா, மொட்டை ராஜேந்திரன், சேலம் வேங்கை கே. ஐயனார், ரோபோ கணேசன், பிரேம்நாத், குல் ரெஞ்சித், விராலி, குணா ஜீ, வர்கீஸ் மேத்யூ, யாமினி ஜோஷி, விஜய் பிரசாத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிரடி படம்: இயக்குநர் அருண் அனிருதன் எழுதி இயக்கி உள்ள படம் அதிரடி. ஆக்ஷன் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் டோவினோ தாமஸ், பாசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு, தர்ஷனா ராஜேந்திரன், ஜரின் ஷிஹாப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… Love Bite Movie: சிட்னி ஸ்வீனி பயலுகா… ஹாரர் நகைச்சுவையுடன் வெளியான சந்தானத்தின் லவ் பைட் பட புரோமோ வீடியோ!