சம்பளம் கூட வாங்காமல் கருப்பு படத்தில் கேமியோ வேடத்தில் மலையாள நடிகர்.. அட இவர்தான்!
TV9 Tamil News May 14, 2026 12:48 AM

நடிகர் சூர்யா (Suriya), திரிஷா (Trisha) மற்றும் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இணைந்து நடித்திருக்கும் மாஸ் எண்டெர்டெயினர் திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள நிலையில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhaynkkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தரமாக வந்திருக்கிறது. இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மே 14ம் தேதி, காலை 9 மணி காட்சிகள் முதல் திரையிடப்படுகிறது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன், தெய்வீகம் மற்றும் அதிரடி கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

சமீபத்தில் கேரளாவிலும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், அதில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி, அதில் கருப்பு திரைப்படத்தில் மலையாள நடிகர் ஒருவர் கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். அது யார் தெரியுமா?, வேறுயாருமில்லை நடிகர் அஜூ வர்கீஸ்தான் (Aju Varghese).

இதையும் படிங்க: திரைப்பட நடிகராக மட்டுமே பார்க்கக்கூடாது… அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது – கமல்ஹாசன் பேச்சு!

கருப்பு படத்தில் கேமியோ வேடத்தில் நடித்த அஜூ வர்கீஸ் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்:

அந்த  நிகழ்ச்சியின்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “அஜு வர்கீஸ் எனது மிக நல்ல நண்பர். நான் கேட்டுக் கொண்ட பிறகு, அவர் விரைவாக வந்து எனது கருப்பு படத்தில் ஒரு அருமையான சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பளம் கூட வாங்கவில்லை” என அதில் கூறியுள்ளார். தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்திலும், சூர்யாவின் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து… முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறிய இயக்குநர் சங்கர்

நடிகர் அஜூ வர்கீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியது தொடர்பான பதிவு:

#AjuVarghese is a very good friend of mine. After my request, he came quickly and did a very nice guest role in my film. He didn’t even take salary for the film.

– Director and actor @RJ_Balaji at #Karuppu Kerala pre-release event. pic.twitter.com/3XZn57o0d6

— Movie Tamil (@_MovieTamil)

மலையாள நடிகர் அஜூ வர்கீஸ் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் மம்முட்டி முதல் மோகன்லால் வரை பல்வேறு உச்ச நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவர் இறுதியாக நிவின் பாலி நடிப்பில் வெளியான சர்வம் மாயா என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் நிவின் பாலியின் நண்பனாகவும், சாமியாராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது, தமிழில் இவர் கருப்பு திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.