தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அந்த கட்சிக்கு 47 எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைத்தனர்.. அதனால் எதிர்கட்சியாக கூட செயல்பட முடியவில்லை.
அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் சீனியர் நிர்வாகிகள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பழனிச்சாமியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். ஒருபக்கம் சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான 25 எம்ல்ஏக்கள் பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.
மேலும், இன்று சட்டசபையில் தவெக கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அவர்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது பழனிச்சாமிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோரை கட்சி பதவியிலிருந்து பழனிச்சாமி நீக்கியிருக்கிறார்.. மேலும், அவர்களுக்கு மாற்றாக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்..