பாஜகவை எதிர்த்த திமுக!.. என்ன செய்யப்போகிறார் விஜய்?.. தவெக பிளான் என்ன?...
WEBDUNIA TAMIL May 15, 2026 10:48 PM


திமுகவை பொருத்தவரை பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பதோடு பாஜகவின் பல திட்டங்களையும் எதிர்க்கிறது. அதனாலேயே பாஜகவால் தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. ஒருபக்கம், தமிழக மக்கள் தேர்தலில் பாஜகவை முழுதாகவே நிராகரிக்கிறார்கள். இதன் காரணமாகவே, திமுக ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை பாஜக அரசு ஒதுக்குவதில்லை.

இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வர் முன்னாள் ஸ்டாலினும் பலமுறை சொல்லியும் பாஜக அரசு மாறவில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசுக்கு தமிழ்நாடு செலுத்துகிறது. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை பாஜக அரசு கொடுப்பதில்லை.

தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் முதல்வர் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார். பாஜகவோ ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே, பாஜக அரசுடன் முதல்வர் விஜய் இணக்கமாக செயல்படுவாரா இல்லை திமுக போல எதிர்த்து செயல்படுவாரா? பாஜக கொண்டுவரும் திட்டங்களை எதிர்ப்பார்களா? இல்லை இணங்கிப்போவார்களா?.. பாஜகவை எதிர்த்தால் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கமாட்டார்கள். அதை விஜய் எப்படி சமாளிப்பார்? என்கிற கேள்வி சாமானியர்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ் ‘மத்திய அரசுடன் வந்து இணக்கமாக இருந்து நிதியைப் பெற்று திட்டங்களை செயல்படுத்துவோம்.. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாலும் கொள்கை ரீதியான மாநில உரிமை சார்ந்த நிலையை தவெக கடைபிடிக்கும்’ என கூறியிருக்கிறார்..

அரசியல்கட்சி துவங்கியவுடனேயே பாஜக தனது கொள்கை எதிரி என விஜய் கூறியிருந்தார். இப்போது, அந்த கட்சியை அவர் எப்படி எதிர்கொள்வார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.