குளுகுளுவென மாறும் சென்னை.. மே 18 வரை வானிலை இப்படி தான் இருக்கும் – பிரதீப் ஜான் தகவல்..
TV9 Tamil News May 15, 2026 10:48 PM

மே 15, 2026: அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:

“தற்போது மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி காரணமாக கிழக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறது. ஆனால் அடுத்த வாரம் மேற்கு திசையிலிருந்து காற்று வீசும் நிலை உருவாகும். எனவே, அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு குளிர்ச்சியான வானிலை நிலவும்.

அடுத்த வாரம் முதல் வானிலை மாறும்:

A comparison of winds today from the east due to the UAC and next week from the west. Enjoy this cool weather for the next 2–3 days. The pattern changes next week as the monsoon winds (Bay of Bengal branch) have started blowing towards the Andaman Sea.

Pondy, Cuddalore,… pic.twitter.com/X64g9a7q2u

— Tamil Nadu Weatherman (@praddy06)

அடுத்த வாரம் வானிலை முறை மாறவுள்ளது. ஏனெனில், தென்மேற்கு பருவமழையின் வங்கக்கடல் கிளை காற்றோட்டம் அந்தமான் கடலை நோக்கி வீசத் தொடங்கும்.

புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று நல்ல மழை பதிவாகியுள்ளது. ஆனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளைப் பொறுத்தவரையில் மழை வாய்ப்பு என்பது சற்று கணிக்க முடியாத சூழலில் உள்ளது. காற்றோட்டம் நகருக்குள் வந்தால் நல்ல மழை பதிவாகும். இல்லையெனில் மழை இருக்காது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்ட கடலோரப் பகுதிகளில் மழைக்கு சாதகமான சூழல் காணப்படுகிறது. இருப்பினும், வரக்கூடிய மே 18ஆம் தேதி வரை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

இதற்கான முக்கிய காரணம் மேலடுக்கு காற்றழுத்த சுழற்சிதான். சென்னை முதல் நெல்லூர் வரை கடலோரப் பகுதிகளுக்கு அருகே இந்த காற்றழுத்த சுழற்சி நீடித்து, அதன் பின்னர் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? தமிழக அரசின் புதிய பயிற்சி திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?

நாளைப் பொறுத்தவரையில், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து, சென்னை கடற்கரைக்கு அருகே மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி மெதுவாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மே 18 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்:

எனவே, மே 17ஆம் தேதி வரை அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் மே 18ஆம் தேதி வரையும் இந்த சுழற்சி அருகில் நீடிப்பதால் வானிலை குளுமையாக இருக்கும். அதேசமயம், மழைக்கும் வாய்ப்பு காணப்படும். அது வலுவிழந்த பிறகு மீண்டும் மேற்கு திசை காற்றோட்டம் திரும்பும்.

இதற்கிடையில், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களிலும், அடுத்த வாரத்திலும் பரவலான நல்ல மழைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.