'ஆயிரம் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருந்து வெளியேறும் பணம்' இந்திய ரூபாய் மதிப்பு ரூ.96-க்கு சரிவு!
Vikatan May 15, 2026 10:48 PM

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்துகொண்டே வருகிறது.

இந்தச் சரிவைத் தடுக்க, அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அது அவ்வளவாக கைக்கொடுக்கவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி தலையிடும் போது, வீழ்ச்சி கட்டுப்படுவதும், அதன் பின், மீண்டும் சரிவை சந்திப்பதும் தொடர்கதையாகி விட்டது.

இன்று சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.07-க்கு சென்றது.

ஏன் இந்தச் சரிவு என்று பார்த்தால், அதற்கு நான்கு முக்கிய காரணங்கள்தான் மிஞ்சுகின்றன.
இந்திய ரூபாய் தங்கம் வாங்குவதற்கு புது செக்: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு; 15% - Breakdown

> சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.

> இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர். FIIs இந்திய சந்தைக்குள் பணத்தைக் கொண்டு வரும்போது நூறு கோடிகளில் கொண்டு வருகின்றனர். ஆனால், வெளியேற்றுகையில் ஆயிரம் கோடிகளில் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

> அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவிற்கு சென்றுள்ளார். அங்கே ஈரான் போர் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இதனால், ஈரான் போர் முடிவு பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் எதுவும் தெரியவில்லை.

> ஆசிய நாடுகளிலும் பெரும்பாலான நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பில் வீழ்ச்சியில் தான் இருந்து வருகின்றன.

இப்படியே இந்திய ரூபாயின் மதிப்பு 2027-ம் ஆண்டில் இறுதி அல்லது 2028-ம் ஆண்டு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.100-ஐ தொட்டுவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

'தங்கம் வாங்காதீங்க'னு சொல்றாங்க; சந்தை இறக்கத்தில் இருக்கு - இப்போ முதலீட்டாளர்கள் என்ன செய்யணும்?
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.