எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar? என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் நேற்று தமிழக முதல்வர் விஜய் 50 ஆயிரம் வரையிலான பயிர் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் தற்போது அதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தின் முன்பாக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முழுமையான பயிர் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.