Breaking: அம்பை அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பு…!!!
SeithiSolai Tamil May 26, 2026 04:48 PM

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் மீதான அதிருப்தி காரணமாக அதிமுக இரண்டு அணிகளாக உடைந்த நிலையில் அதில் ஒரு பிரிவினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்காக தலைமைச் செயலகம் வந்துள்ளார். ஆனால் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை கொண்டு வராமல் தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை கொண்டு வந்ததால் சபாநாயகர் அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் இதனைத் தொடர்ந்து அவர் கைப்பட கடிதம் எழுதுவதற்காக சென்றுள்ளார். அடுத்தடுத்து அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.