கோலிவுட் சினிமாவில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் மற்றும் சமூக ஆர்வலராகவும் இருந்துவருபவர் பா.ரஞ்சித் (Pa.Ranjith). இவர் இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் மற்ற நடிகர்களின் படங்களில் பணியாற்றிவருகிறார். அந்த வகையில் இவர் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் (GV. Prakash Kumar)புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் நடிகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளர்கவும் ஜி.வி.பிரகாஷ் குமார் பணியாற்றிவருகிறாராம். இப்படத்தை பா.ரஞ்சித் தயாரிக்க, இயக்குநர் அகிரான் மோசஸ் (Akiran Moses) என்பவர் இயக்கவுள்ளாராம். இந்த படமானது டிராஃபிக் பிரச்சனை மற்றும் வாகன மோதலால் வரும் பகையை மையமாக கொண்டு ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம்.
அந்த வகையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று, 2026ம் ஆண்டு மே 30ம் தேதியில் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு படக்குழு “வெக்கை” (Vekkai) என டைட்டில் வைத்துள்ளது. இது தற்போது இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கணவன் மனைவி ஃபைட்.. மேக்கிங் வீடியோவை பகிர்ந்த கட்டா குஸ்தி 2 படக்குழு!
ஜி.வி பிரகாஷுடன் இணைந்து நடிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர்:The punch lasts a second. The nightmare lasts forever!
The #FightBegins now with #Vekkai 🚦
A @gvprakash x @sreenathbhasi Faceoff
A film by @AkiranMoses
A #GVPrakash MusicalProduced by @venkateshDivine #Lemuel @beemji @officialneelam @suneeltollywood @Rshivani_1… pic.twitter.com/IOE5wdw2Gr
— Think Music (@thinkmusicindia) May 30, 2026
வெக்கை படமானது வாகனம் தொடர்பான ஒரு திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இதை இயக்குநர் அகிரான் மோசஸ் இயக்க, பா.ரஞ்சித் தயாரித்துவருகிறார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். அந்த வகையில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இணையான வேடத்தில் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி நடித்துவருகிறார். இவர் 2024ம் ஆண்டில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில், அனைவராலும் கவரப்பட்ட சுபாஷ் என்ற வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித் குமார் 64 படம் உருவாவதில் தாமதமா? வைரலாகும் புது தகவல்
இவர் மலையாளத்தில் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில், இந்த வெக்கை என்ற படத்தின் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த வெக்கை படத்தில் மேலும் சுனில், ஷிவானி ராஜசேகர், லட்சுமி பிரியா, லிங்கேஷ், மைம் கோபி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.