June Month Release : ஜூன் மாதம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
ராகேஷ் தாரா May 31, 2026 12:14 AM

சூர்யாவின் கருப்பு திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகி வசூலை குவித்துள்ளது. அடுத்தபடியாக ஜூன் மாதம் பல்வேறு திரைப்படங்கள் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கின்றன. அப்படி வெளியாக இருக்கும்  தமிழ் மற்றும் பிற மொழி படங்களின் லிஸ்ட்  இதோ

பரிமளா & கோ (தமிழ்)

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திர்ல்லர் திரைப்படம் பரிமளா & கோ. ஜெயராம் , ஊர்வசி , யோகிபாபு , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , அனந்திகா சனில்குமார் , சாண்டி மாஸ்டர் , மிஷ்கின்  ஆகிய பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஜூன் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது 

ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹே (இந்தி)

இந்தியில் வருன் தவான் , மிருணாள் தாகூர் , பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹே. ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை டேவின் தவான் இயக்கியுள்ளார். ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது 

மோலிவுட் டைம்ஸ் (மலையாளம்)

பிரேமலு , ஆலப்புழா ஜிம்கானா  படத்தின் மூலம் கவனமீர்த்த நஸ்லென் அடுத்தபடியாக நடித்துள்ள படம் மோலிவுட் டைம்ஸ். சங்கீத் பிரதாப் ஷராஃபுத்தீன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அபிநவ் சுந்தர் நாயக் இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இயக்குநராகும் கனவோடு வரும் ஒரு இளைஞரின் வாழ்க்கையை பற்றிய படம் . ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது .

பெத்தி (தெலுங்கு)

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்போட்ஸ் ஆக்‌ஷன் திரைப்படம் பெத்தி.  இயக்குநர் புச்சி பாபு சனா இப்படத்தை  இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 

மா இண்டி பங்காரம் (தெலுங்கு)

சமந்தா நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு குஷி திரைப்படம் வெளியானது. இதன்பின் 3 ஆண்டுகளுக்குப் பின் அவரது மா இண்டி பங்காரம் திரைப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயண் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

துரந்தர் த ரிவெஞ்ச்

கடந்த மார்ச் மாதம் திரையரங்கில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய துரந்தர் த ரிவெஞ்ச் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. வரும் ஜூன் 5 ஆம் தேதி ஜியோஸ்டார் தளத்தில் துரந்தர் படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் சேர்த்து வெளியாகிறது . 

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.