விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
குலசேகரன் முனிரத்தினம் May 31, 2026 03:14 PM

ADMK Vs TVK: திமுக - அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் ரஜினிகாந்த் பங்கு வகித்தது உண்மைதான் என, யூட்யூபர் ராஜவேல் குற்றம்சாட்டி இருக்கிறார்.

திமுக - அதிமுக கூட்டணி முயற்சி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முயற்சிகளை முன்னெடுத்தது. அதேநேரம், யாரும் எதிர்பாராத விதமாக பரம எதிரிகளாக உள்ள திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து, விஜய் முதலமைச்சஎராவதை தடுக்க முயல்வதாக சில தகவல்கள் வெளியாகின. இதற்கு ரஜினிகாந்தும் தூது சென்றதாக கூறப்பட்டது. இதனை திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகளும் உறுஇதிபடுத்தியுள்ளன. அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் உள்ள சி.வி. சண்முகமும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையும், ரஜினிகாந்தும் இந்த கூட்டணி முயற்சிகளை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ப்ளான் போட்ட எ.வ. வேலு

இந்நிலையில் பிரபல யூட்யூபரும், அரசியல் விமர்சகருமான ராஜவேல் நாகராஜன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பகிர்ந்துள்ள பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பேட்டியில் பேசுகையில், “திமுக - அதிமுக கூட்டணி முன்னெடுப்பு தொடர்பாக தன்னை இரண்டு திமுக அமைச்சர்கள் தொடர்புகொண்டதாக சி.வி. சண்முகம் பேசினார். அப்படி பேசியவர்கள் எ.வ. வேலு மற்றும் கே.எம். நேரு ஆவர். திருவண்ணாமலையில் ரிசாட்டை வைத்துள்ள ரஜினிகாந்த்திற்கும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த எ.வ. வேலுவிற்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. அதன் அடிப்படையில் தான் ரஜினி என்ன நினைக்கிறார் என்பதை திமுகவிடமும், தங்கள் கட்சி என்ன நினைக்கிறது என்பதை அதிமுக தலைமையிடமும் சொல்வதற்கான மையப்புள்ளியாக எ.வ. வேலு. நியமிக்கப்பட்டார். காரணம் அவர் பொறுப்பில் வழங்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெறும் 4 அல்லது 5 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது. அதனை ஈடுகட்டி தனது இருப்பை கட்சியில் உறுதி செய்துகொள்ளவே, நிதிதேவை உள்ளிட்ட அனைத்தையும் தான் பொறுப்பேற்ரு செய்வதாக அதிமுக - திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை எ.வ. வேலு முன்னெடுத்தார்.

பொய் சொன்ன ரஜினி? ஒகே செய்த உதயநிதி

நான் வெளிப்படையாகவே சொல்கிறேன், உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை முன்மொழிந்தார். ஏனென்றால் விஜய் வராமல் இருக்க வேண்டும் என அவர் கருதினார். ரஜினிக்கும் இதுதான் எண்ணம். தேர்தல் முடிவுகள் தனக்கு ஆச்சரியம் அளித்ததாக சொன்னது ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அல்ல. ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாகவே இருந்தது. ரஜினியின் பெருந்தன்மையை கொண்டாட பல விஷயங்கள் உள்ளன. ஆனால் இந்த தேர்தல் முடிவின்போது அவர் சூத்திரதாரியாகவே செயல்பட்டார். ஆனால், மறுப்பு சொல்லி அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பை உடன் இருந்தவர்களே விரும்பவில்லை. பேசாமல் விட்டு இருக்கலாமே, இதன் மூலம் நீங்கள் முயற்சிகளை மேற்கொண்டது மேலும் உறுதியாகுமே என கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், நான் பேசாமல் விட்டால் இது மேலும் பெரிய விஷயமாகும் என்பதாலேயே பேட்டி அளித்ததாக ரஜினி பதிலளித்துள்ளார்.

யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்

தவெக ஆட்சி அமைக்காமல் தடுக்கும் முயற்சிகளை ரஜினி வெளிப்படையாகவே முயற்சித்துள்ளார். காரணம் தவெகவின் 108 என்ற நிலையில் அப்படியே இருக்கும் அல்லது மறுதேர்தலுக்கு போகுமே தவிர, விஜய் ஆட்சி அமைக்க முடியாது என ரஜினிகாந்த் நம்பினார். ஆனால் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் ஆதரவு அளிப்பார்கள் என ரஜினி மட்டுமின்றி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட எதிர்பார்க்கவில்லை. இதனிடையே, திமுக உடன் கூட்டணி அமைப்பதற்கு பதிலாக தவெகவிற்கு ஆதரவு அளிக்கலாம் என சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனும், உதயநிதியும் தொடர்ந்து தீவிரமாக பேச தொடங்கியுள்ளனர். இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் ரஜினிகாந்த் சுயமாகவே முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: Safest Family SUVs: சும்மா ஒன்னும் காசு வாங்கல..! குடும்பங்களுக்கு பாதுகாப்புன்னா நாங்க தான் - டாப் 5 எஸ்யுவிக்கள்

ரஜினிக்கான லாபம் என்ன?

திரைத்துறையில் தன்னுடைய வாழ்நாளில் தான் தொட்ட உயரத்தை யாரும் தொடவில்லை. எ,.ஜி.ஆருக்குப் பிறகு ஒருவர் திரைத்துறையில் இருந்து வந்து முதலமைச்சரானது இல்லை என்ற வரலாறு அப்படியே தொடர வேண்டும் என விரும்புகிறார். காரணம் ஒருவேளை ரஜினி வந்து இருந்தால் வென்று இருப்பார் என அவர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். ஆனால் அந்த சாதனையை வயது, வெற்றி, வசூல், திரைத்துறை அனுபவம் என எல்லாவற்றிலும் தன்னைவிட பின் தங்கி இருக்கும் விஜய், அரசியலில் மட்டும் தன்னைவிட ஒரு படி மேலே செல்வதை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. இதுதொடர்பான ஆதங்கத்தை அவர் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் ஆங்காங்கே பதிவு செய்து வந்ததை செவிவழி தகவல்களாக கேள்விபட்டு இருக்கிறேன். 

திட்டவட்டமாக சொன்ன உதயநிதி

இந்த நேரத்தில் தான் திமுகவிற்கும் அதிமுகவிற்குமான பேச்சுவார்த்தை தொடங்கியதுமே, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கட்டும். அதில் எனக்கு எந்த பிரச்னையுமே இல்லை, எந்த பொறுப்பும் எனக்கும் வேண்டாம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் விஜய் முதலமைச்சராகிவிடக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சபரீசன் வேறு ஒரு நிலைப்பாட்டை சொன்னாலும், அவரது பென் நிறுவனத்தால் தான் திமுக தோல்வியுற்றது என்ற கருத்து வலுவாக இருந்ததால், சபரீசனின் கருத்து நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வெளியேறவே, உதயநிதி ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியின் மகனும் தான் இந்த திட்டத்தை முழுக்க முழுக்க அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்” என ராஜவேல் நாகராஜன் பேசியுள்ளார். இதுதொடர்பான்அ வீடியோ துண்டுகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வர, திமுக மற்றும் அதிமுக கூட்டுக் களவாணிகள் என அம்பலப்படுத்தியது தாங்கள் தான் என தவெகவினர் பேசி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.