India A Team: முத்தரப்பு தொடர்.. காயத்தால் வெளியேறிய பராக்.. துணை கேப்டனாக ருதுராஜூக்கு வாய்ப்பு!
TV9 Tamil News June 01, 2026 11:48 AM

இந்தியன் பிரீமியர் லீக் 2026 சீசனுக்கு (IPL 2026) பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), ஆப்கானிஸ்தான் ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு எதிரான முத்தரப்புத் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. இந்த முத்தரப்புத் தொடரானது வருகின்ற 2026 ஜூன் 9 முதல் ஜூன் 21 வரை நடைபெறும். இந்தநிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட துணை கேப்டனுக்கு மாற்றாக, யாரும் எதிர்பார்க்க வகையில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய ‘ஏ’ அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முத்தரப்புத் தொடரில் திலக் வர்மா இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ரஷீத் கான் இல்லை.. இந்திய தொடருக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

கெய்க்வாட் யாருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்?

🚨 News 🚨

Ruturaj Gaikwad added to India A squad for tri-series in Sri Lanka as a replacement for injured Riyan Parag.

Details 🔽 https://t.co/COTmObu7Sg

— BCCI (@BCCI) May 31, 2026


இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முத்தரப்புத் தொடரில் ரியான் பராக்கிற்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படவிருந்தது. பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையின்படி, தொடை தசைநார் காயம் காரணமாக பராக் முத்தரப்புத் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐபிஎல் 2026 சீசனில் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தலைமை தாங்கினார். இவரது தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும், குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றி வெளியேறியது.

முத்தரப்பு தொடருக்கான இந்திய ஏ அணி:

திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, சூர்யன்ஷ் ஷெட்ஜ், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர், யஷ்ப்ராஜ் நிகாம், விஷ்ப்ராஜ் நிகாம், அன்ஷூல் கம்போஜ், அர்ஷத் கான், அனுகுல் ராய்

ALSO READ: கில், சூர்யகுமார் யாதவ் நீக்கம்.. ஒலிம்பிக்கிற்கு 30 உத்தேச வீரர்கள் பட்டியலை தயார் செய்த பிசிசிஐ!

திலக் வர்மா கேப்டன்:

முத்தரப்புத் தொடரில் திலக் வர்மா இந்திய அணிக்குத் தலைமை தாங்குவார். ஐபிஎல் 2026 சீசனில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷியும் அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் வைபவ் சூர்யவன்ஷி ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பையில் இந்தியா ‘ஏ’ அணிக்காக அறிமுகமானார். அந்தத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 42 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை விளையாடினார். வைபவ் சூர்யவன்ஷி நடப்பு ஐபிஎல் 2026 சீசனிலும் 700க்கு மேற்பட்ட ரன்களை குவித்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.