என்னப்பா விவாதம் இது? எல்லார் காலிலும் விழுந்த வைபவ்.. கோலியைப் பார்த்ததும் கைகூப்பியது ஏன்? சோசியல் மீடியாவில் வைரலாகும் 'நமஸ்தே' வீடியோ..!!
SeithiSolai Tamil June 01, 2026 03:48 PM

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி பேக்-டு-பேக் சாம்பியன் பட்டம் வென்று மாஸ் காட்டியுள்ள நிலையில், மைதானத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சந்திப்பு இப்போ செம ட்ரெண்டாகி வருகிறது!

இந்த சீசனில் ஆரஞ்சு கேப் வென்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்த 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, போட்டி முடிந்ததும் ‘ரன் மெஷின்’ விராட் கோலியை நேரில் சந்தித்துப் பேசினார்.

வழக்கமாகத் தான் சந்திக்கும் அனைத்து சீனியர் வீரர்களின் கால்களையும் தொட்டு ஆசி வாங்கும் வைபவ், விராட் கோலியைச் சந்தித்த போது மட்டும் அவரது காலைத் தொடாமல், தூரத்திலிருந்தே பயபக்தியுடன் கைகூப்பி ‘நமஸ்தே’ சொல்லி வரவேற்றார்.

இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் பலரும் “ஏன் கோலியோட காலைத் தொடல?” என விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால், அங்கே நடந்தது வேற லெவல் பாசம்! வைபவ் கைகூப்பிய அடுத்த கணமே, விராட் கோலி அவரிடம் ஓடிவந்து ஆரத்தழுவி, கைகுலுக்கி, அவரது தோளில் கைபோட்டு மிகவும் சகஜமாகப் பேசத் தொடங்கினார்.

“உன்னோட ஆட்டத்துல மட்டும் நல்லா ஃபோகஸ் பண்ணு தம்பி” என கோலி அவருக்குப் பாசத்தோடு அட்வைஸ் செய்துள்ளார்.

“>

ஐபிஎல் 2026-ல் சிக்ஸர் மழை பொழிந்து சாதனை படைத்த வைபவ் மற்றும் இறுதிப் போட்டியில் 75 ரன்கள் குவித்து ஆர்சிபியை ஜெயிக்க வைத்த கோலி ஆகிய இரு துருவங்களின் இந்தச் சந்திப்பு, ரசிகர்களின் நெஞ்சங்களை இப்போ நெகிழ வச்சிருக்குப்பா!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.