“சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற இந்தியாவின் அறிவிப்பு!”.. வியட்நாமின் ராணுவப் பாதுகாப்பை பலப்படுத்தும் பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்..!!
SeithiSolai Tamil June 01, 2026 04:48 PM

இந்தியா தயாரிக்கும் அதிவேக ‘பிரம்மோஸ்’ ஏவுகணையை வியட்நாமுக்கு விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வியட்நாமின் ராணுவப் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 5,800 கோடி ரூபாய் ஆகும். இதேபோல், இந்தோனேசியா நாட்டுடனும் பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் அந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு, கடந்த 2022-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாடு இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது வியட்நாமும், அடுத்ததாக இந்தோனேசியாவும் இந்த வரிசையில் இணைகின்றன.

சீனாவுடன் எல்லைப் பிரச்சினைகளையும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வரும் இந்தத் தென்கிழக்கு ஆசிய நாடுகள் தங்களின் ராணுவ வலிமையைப் பெருக்கி வரும் வேளையில், இந்தியாவின் இந்த ஏவுகணை விற்பனை ஒப்பந்தங்கள் சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.