ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் 'ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹே' படத்தின் ப்ரோமோஷனில் நடிகர் வருன் தவானின் செயல்கள் பரவலாக விமர்சனத்தை சந்தித்து வருகின்றன. சக நடிகைகளான பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாகூர் ஆகிய இருவருடனும் அவர் பொது இடங்களில் நெருக்கம் காட்டி வருவதை ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் வருன் தவான் தற்போது ரொமாண்டிக் காமெடி திரைப்படமான 'ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹே' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இரு முன்னணி நடிகைகளான மிருணாள் தாகூர் மற்றும் பூஜா ஹெக்டே இருவர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்கள். பிகினி நடனம் , முத்தக் காட்சிகள் என இந்த படத்தின் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரிய பேசுபொருளாகியுள்ளன. இரு நடிகைகளின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது ஆத்திரத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள். இது போதாது என்று வருன் தவான் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இரு நடிகைகளிடம் பயங்கர உல்லாசமாக பழகி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பான வருன் தவான் பொது நிகழ்ச்சிகளில் இந்த மாதிரி இரு நடிகைகளிடம் நெருக்கமாக பழகி வருவதை பலர் விமர்சித்து வருகிறார்கள்.
ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹே' பட நிகழ்வில் வருன் தவான் பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாகூருக்கு சாப்பாடு ஊட்டிவிட்டார். அவரது செயலால் மிருணாள் தாகூர் அதிர்ச்சியடைந்தாலும் அவரால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களது விமர்சனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
Varun Dhawan is married with a kid, see how he is feeding Mrunal Thakur and Pooja Hegde from his own hands.
— Chota Don (@choga_don) June 1, 2026
Mrunal got surprised by seeing him doing this but she couldn't do anything because Varun is a big start compared to both of them.
Just a Bollywood thing pic.twitter.com/tsaUGRuWEO