இந்திய கடற்படையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பல்கள் மற்றும் ஆயுதங்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் கடல்சார் பாதுகாப்புப் படையில் புதிய வரலாறு படைக்கப்பட உள்ளது.
மேலும் கடலில் இந்தியாவின் பலத்தை பறைசாற்றும் வகையில், ‘திரிசக்தி’ எனப்படும் மூன்று முக்கிய கடற்படைப் பிரிவுகள் ஒன்றிணைந்து கூட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளன. முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் இதில் களம் இறக்கப்படுவதால், வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருப்பது பெருமளவில் குறைந்து, இந்தியாவின் தற்சார்பு நிலை மேலும் வலுவடைந்துள்ளது.
இந்த ‘திரிசக்தி’ கூட்டுப் படையெடுப்பு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அதிநவீன ஏவுகணைகள், ரேடார் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புத் திறன்களுடன் இந்த உள்நாட்டுப் படைகள் கடலில் முழு கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளன.
இந்நிலையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் இந்த அசாத்திய வளர்ச்சி, இந்தியப் படைகளின் போர் திறனை அதிகரிப்பது மட்டுமின்றி, உலக அரங்கில் இந்தியாவை ஒரு வல்லமைமிக்க பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளராகவும் நிலைநிறுத்தியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.