இது முற்றிலும் நியாயமான வட்டியும் முதலுமான பதிலடிதான்.! “போரை நிறுத்த வேண்டிய நேரம் வந்தாச்சு” -பல ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தாக்குதலில் உக்ரைன்.. ஜெலென்ஸ்கி பரபரப்பு பதிவு..!!
SeithiSolai Tamil June 18, 2026 07:48 PM

“உக்ரைன் மேல அவங்க நடத்துன அராஜகத் தாக்குதலுக்கு நாங்க கொடுத்தது முற்றிலும் நியாயமான வட்டியும் முதலுமான பதிலடிதான் , போரை நிறுத்த வேண்டிய நேரம் வந்தாச்சு !”

என்று உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது சமூக ஊடகப் பக்கத்தில் அதிரடியாகப் பதிவிட்டுத் தாக்குதலைப் பாராட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது உக்ரைன் ராணுவம் நடத்தியுள்ள பல ஆண்டுகளில் இல்லாத மாபெரும் அசுர ட்ரோன் தாக்குதலில் அங்கிருந்த முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலாகியுள்ளதுஉலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஸ்ப்ரோம் நெஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை (MNPZ) குறிவைத்து உக்ரைன் வீசிய ஆளில்லா விமானங்கள் வெடித்துச் சிதறியதால், ஒட்டுமொத்த தெற்கு மாஸ்கோ வானத்தையே கரும்புகை சூழ்ந்துகொண்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் கடுமையான இரசாயன நாற்றமும் பரவியுள்ளது.

“>

 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கசான் நகரில் தென்கிழக்கு ஆசிய (ஆசியான்) நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில், மாஸ்கோவை நெருங்கிய 180 ட்ரோன்கள் சுட்டுகொல்லப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் கூறினாலும்,

நாட்டின் மிகப்பெரிய பரபரப்பான ஷெரமெட்வேவோ விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து ஏர்போர்ட்டுகளும் பல மணி நேரம் அவசரமாக மூடப்பட்டு பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அள்ளிச் செல்லப்பட்டதும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீது ட்ரோன்கள் விழுந்து மக்கள் கதறி அழுததும் ரஷ்ய நாட்டின் அசைக்க முடியாத ஸ்திரத்தன்மையை அடியோடு கேள்விக்குறியாக்கியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.