சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, எந்தச் சட்டச் சிக்கல் வந்தாலும் அதைச் சந்திக்கத் தயார் என்றும், எதற்கும் அஞ்சப் போவதில்லை என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்கச் சபாநாயகர் அனுமதி அளித்திருந்தால், அவரே நேரடியாகப் பதிலடி கொடுத்திருப்பார் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களின் குறுக்கீடுகளைச் சபாநாயகர் அனுமதித்து, அதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்த ஜனநாயக மரபுகளைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை” என்று உறுதியாகக் கூறினார். இந்த உருட்டலுக்கும் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
“>
எந்தச் சூழலிலும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை, அடிக்க அடிக்க மேலும் வலிமையுடன் உயர்ந்து கொண்டே தான் இருப்போம் என்று தனது கருத்துகளைத் தெளிவாகவும் காட்டமாகவும் பதிவு செய்தார்.