தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக திருமண நிகழ்வுகள், பிறந்தநாள் கொண்டாடங்களிலும், தீபாவளி உள்ளிட்ட விஷேச நாட்களிலும் இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள். அதிலும் இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதிய உச்சமாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்தது.
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கத்தில் முதலீட்டிற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது அதிகளவு முதலீடு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஈரான் -அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து தங்கம் விலையானது சரிய தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 6 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கத்தின் விலையானது நேற்று அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலையானது சரிந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்று 210 ரூபாய் குறைந்து 13,350 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 1,680 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையானது கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.