அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் முதலமைச்சர் விஜய் சட்டசபையில் சொன்ன குட்டி ஸ்டோரி மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கலாய்த்து செய்த அக்ஷன் ஆகியவற்றை கடுமையாக சாடியுள்ளார். ஏற்கனவே பல கட்சி தலைவர்கள் சட்டசபையை சூட்டிங் ஸ்பாட் போல் மாற்றி வைத்திருப்பதாக முதல்வர் விஜயை விமர்சித்து வரும் நிலையில் தற்போது ஜெயக்குமாரு ம் அவரை கடுமையாக விமர்சித்து மீண்டும் அவருக்கு பாடம் எடுத்துள்ளார். ஏற்கனவே ஒருமுறை எப்படி செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என அவர் பாடம் எடுத்த நிலையில் அதாவது ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு தற்போது சட்டமன்றத்தில் மாண்புடன் பதவிக்குரிய பொறுப்புடன் நடந்து கொள்வது எப்படி என்றும் பாடம் எடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?* நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது… வாழ்த்துக்கள்!! ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல…. “5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல” என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க…. Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க என்று பதிவிட்டுள்ளார்.