மனோஜின் புது பேரை கேட்டு குடும்பம் கொடுத்த ரியாக்‌ஷன்… நீங்களும் அதான நினைச்சீங்க?
CineReporters Tamil June 24, 2026 05:48 PM

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடராக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசையின் கதைக்களம் ரொம்ப டல்லடித்து வரும் நிலையில் இன்னமும் கதையை வெறுமனே இழுத்துக்கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. 

மனோஜ் விஜயாவை தனியாக அழைத்து சென்று தன்னுடைய பிசினஸ் பிரச்சனையால் நியூமராலஜி வந்து பார்த்தார். எனக்கு வேறு ஒரு பெயர் வைத்து இருக்கிறார். அதை சொல்லி கூப்பிட்டாலே எனக்கு கோடி கோடியாக வருமானம் வரும் என்கிறார். 

விஜயாவும் ஆசையில் அப்படி என்னடா உனக்கு பேரு வச்சாங்க எனக் கேட்க பப்பரப்பா மனோஜ் என சொல்ல விஜயா ஷாக்காகி நிற்கிறார். உனக்கு என்னடா லூசு பிடிச்சிட்டா எனத் திட்டுகிறார். ஆனால் மனோஜ் இந்த பெயரை சொன்னால் இந்த மாசமே கோடி கோடியா கொட்டும் என்கிறார். 

இதில் விஜயா பேராசையால் அப்போ இந்த பெயரையே சொல்லலாம் என்கிறார். வீட்டினரிடம் சொல்ல சொல்ல அவரும் வெளியில் போய் மனோஜின் பிசினஸ் பிரச்சனையால் அவன் ஜோசியரை பார்த்ததாக சொல்லுகிறார். 

என்ன சொன்னாரு எனக் கேட்க பெயரை மாற்றி இருக்காங்க. இனிமே அதை தான் சொல்லணும் என்கிறார். என்ன பேரு எனக் கேட்க பப்பரப்பா மனோஜ் எனச் சொல்ல முத்து, மீனா தொடங்கி அண்ணாமலை, ஸ்ருதி, ரவி என எல்லாரும் வெடித்து சிரிக்கின்றனர். 

மனோஜ், விஜயா இருவரும் அமைதியாக  கடுப்புடன் பார்க்கிறார். நீங்க இந்த பேரை சொல்லி தான் கூப்பிடணும். அப்போ தான் எனக்கு வருமானம் வரும் எனக் கூற முத்து சிரித்துக்கொண்டே என்னடா பப்பரப்பா நல்லா இருக்கீயா என கலாய்க்கிறார். அண்ணாமலை அதை கூட சொல்ல முடியாமல் சிரிக்கிறார். 

ரோகிணி வீட்டுக்கு வரும் கிரிஷ் பாட்டி அவரை தனியாக அழைத்து கிரிஷ் ஸ்கூலில் வர சொன்னாங்க. அவன் எல்லாரிடமும் மூர்க்கமாக நடந்துக்குறான். அடிக்கிறான். பொய் சொல்றான் எனக் கூற ரோகிணி கோபத்துடன் செல்கிறார். 

பொய் சொல்ல யாரிடம் கத்துக்கிட்ட சொல்லுடா யார்கிட்ட கத்துக்கிட்ட என திட்டிக்கிட்டே இருக்க அவர் அசராமல் உன்கிட்ட தான் அம்மா என்கிறார். இந்த எபிசோட்டுல ஒன்னுமே இல்ல ரகம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.