1+1 = 3… பிரியங்கா தேஷ்பாண்டேயின் சர்ப்ரைஸ் நியூஸ்… செமையா இருக்கே!
CineReporters Tamil June 24, 2026 06:48 PM

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளாரான பிரியங்கா தேஷ்பாண்டே கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட்டில் நெட்டிசன்களே செம ஷாக்கிங் சர்ப்ரைஸில் இருக்கின்றனர். 

பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய காமெடிகளால் வைரல் ஆனவர். பல பெண் தொகுப்பாளினி இருந்த விஜய் தொலைக்காட்சியில் எல்லாரையுமே நகர்த்திவிட்டு அவருடைய டாப் ஸ்பாட்டை பல வருடமாக தக்க வைத்து வந்தார். 

இவருக்கும் விஜய் டிவியில் பணிபுரிந்து வந்த பிரவீனுக்கும் திருமணம் முடிந்தது. ஆனால் அதை தொடர்ந்து இருவரும் சில வருடத்திலேயே பிரிந்துவிட்டனர். இதையடுத்து சிங்கிளாகவே வலம் வந்தார் பிரியங்கா. இதற்கான காரணமும் சொல்லப்படவில்லை. 

தொடர்ந்து சமீபத்தில் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பரபரப்பு இல்லாமல் சிம்பிளாக முடிந்த இவர்கள் திருமணமே பலருக்கு ஷாக்கிங்காக இருந்தது. அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் தொகுப்பாளினி வேலையை பார்த்துகொண்டு லண்டனில் கணவருடன் இருக்கிறார். 

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே சமீபத்திய பதிவுகள் வைரலாகி இருக்கிறது. அதில் தான் அம்மாவாக போவதை உறுதி செய்து இருக்கிறார். இதனால் விஜய் டிவியில் இனி பிரியங்காவை காண்வது குறையலாம் எனக் கூறப்படுகிறது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.