Suriya 48 : ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...ஜோடியாகும் கயடு லோஹர்
ராகேஷ் தாரா June 29, 2026 06:14 PM

சூர்யாவின் 48 ஆவது திரைப்படத்தை ஹாம்பேல் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கயடு லோஹர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கருப்பு படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சனஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ஆவேஷன் படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த நிலையில்  இன்று சூர்யாவின் 48 ஆவது திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. 

சூர்யா 48

ஜெய் பீம் திரைப்படத்தைத் தொடர்ந்து  ஞானவேல் இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல கன்னட தயாரிப்பு நிறுவனமான ஹாம்பேல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கயடு லோஹர் இந்த படத்தில் நாயகியாக நடிக்க சாய் அப்யங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான கருப்பு படத்தின் வெற்றிக்கு சாய் அப்யரங்கரின் இசை பெரியளவில் பலமாக அமைந்தது. இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்ற நிலையில் படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது

சூர்யா 48 கதை

5 ரூபாய் டாக்டர் என பரவலாக அறியப்பட்ட திருவேங்கடம் வீரராகவனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சூர்யா கதா நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் ஏழை மக்களுக்கு வெறும் 2 முதல்ரூபாய்  பெற்று மருத்துவம் செய்து பிரபலமாக அறியபப்ட்டவர் தான் இந்த திருவேங்கடம் வீரராகவன் . இவரது மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான் பத்மஶ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞ்சர் சந்துருவின் கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடித்திருந்தார் . சூரரைப் போற்று திரைப்படம் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களும் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்தபடியாக 5 ரூபாய் டாக்டராக சூர்யா நடிக்க இருப்பது பெரியளவில் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.