டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களை தியேட்டருக்குள்ள விடல..! இப்ப எச்சில் இலை எடுக்க தூய்மை பணியாளர்களா…? சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏ.. வீடியோவை வெளியிட்ட இபிஎஸ்..!!
SeithiSolai Tamil July 07, 2026 10:48 PM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, தனக்குச் சொந்தமான திரையரங்கில் தற்போதைய முதலமைச்சர் நடித்த திரைப்படம் வெளியானபோது, முறையான டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவர் சமூகத்தினரை உள்ளே அனுமதிக்க மறுத்து சர்ச்சையில் சிக்கிய மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரன்.

நேற்று நடைபெற்ற தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவில், மக்களுக்காகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு எச்சிலைச் சுத்தம் செய்ய வைத்து இழிவுபடுத்தியுள்ளார். சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களைத் தொடர்ச்சியாக இத்தகைய செயல்கள் மூலம் இழிவுபடுத்துவது எந்த மாதிரியான மனநிலை? என்று பதிவிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.