கர்னூல், ஜூலை 07 : கர்நாடகாவில் (Karnataka), விபத்தில் தாய் நாய் உயிரிழந்த நிலையில், அதன் குட்டிகளுக்கு பன்றி ஒன்று பால் ஊட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயை இழந்து குட்டிகள் பசியால் தவித்துக்கொண்டு இருந்த நிலையில், தாய் உள்ளத்தோடு அந்த பன்றி பாலூட்டியுள்ளது. இந்த நிலையில், தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பன்றி பாலூட்டிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாயை இழந்த நாய் குட்டிகள் – பசியால் தவித்த அவலம்ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கோசிகியை அடுத்த ஜாம்பாபுரத்தில் பெண் நாய் ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது. ஆனால், அந்த பெண் நாய் இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது. தாய் உயிரிழந்த நிலையில், பிறந்து சில நாட்களே ஆன நிலையில் அந்த நாட் குட்டிகள் பசியால் தவித்துள்ளன. நாய் குட்டிகள் பசியால் தவித்ததை கண்டு அந்த பகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க : 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 4 இளைஞர்கள்.. ஒருவரை அடித்தே கொன்ற ஊர் மக்கள்!
நாய் குட்டிகளுக்கு தாயாக மாறிய பன்றிஇவ்வாறு நாய் குட்டிகள் பசியால் தவித்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கு ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, நாய் குட்டிகள் பசியால் தவித்ததை பார்த்த அந்த பகுதியில் சுற்றித் திரியும் பெண் பன்றி ஒன்று அந்த நாய் குட்டிகளின் சத்தத்தை கேட்டு அந்த பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது பசியால் தவித்த நாய் குட்டிகளுக்கு அந்த பன்றி பாலூட்டியுள்ளது.
இதையும் படிங்க : கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணி தொடக்கம்? பெரும் பரபரப்பு!
தங்களது தாய் இறந்துப்போனது கூட தெரியாமல் அந்த நாய் குட்டிகள் பசியால் தவித்துக்கொண்டு இருந்த நிலையில், அவை அந்த பன்றியை தங்களது தாயாக நினைத்து பால் குடித்துள்ளன. தங்களுக்கு நன்கு பசி முடிந்த பிறகே அந்த பன்றியை நாய் குட்டிகள் விட்டு விலகியுள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.