இயற்கையை பாதுகாக்க நதியை திருமணம் செய்த பெண்.. தொடர்ந்து போராடி வருகிறார்!
TV9 Tamil News July 08, 2026 01:48 AM

லண்டன், ஜூலை 07 : இயற்கை இல்லை என்றால் மனிதர்கள் இல்லை. இயற்கைக்கு எந்த பாதுகாப்பும் ஏற்படாத வகையில் மனிதர்கள் நடந்துக்கொள்ளும் வரை தான், இயற்கை மனிதர்களை பாதுகாக்கும். இதுவே மனிதர்கள் இயற்கைக்கு எதிராக நடக்கும்போது இயற்கை சரியான பாடத்தை கர்பிக்கும். நாம் வாழும் இந்த பூமி காலப்போக்கில் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகிறது. வரட்சி, வெப்பம், மாசு உள்ளிட்ட சிக்கல்கள் இதில் அடங்கும்.

இயற்கையை காக்க நதியை திருமணம் செய்த லண்டன் பெண்

இந்த சூழலில் தான் இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கையில் உலகம் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களால் முடிந்தவரை இயற்கையை பாதுகாக்கும் வேலைகளை செய்கின்றனர். அந்த வகையில் லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் இயற்கையை பாதுகாக்க வேறு வழியின்றி, நதி ஒன்றை திருமணம் செய்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பே நதிடை திருமணம் செய்த நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : தலைவர் யார் என்பது நெதன்யாகுவுக்குத் தெரியும் – வெள்ளை மாளிகை சந்திப்பு குறித்து ட்ரம்ப் பேச்சு

நதியின் உரிமைகளுக்காக போராடி வரும் பெண்

இங்கிலாந்தை சேர்ந்த மெக் என்ற 28 வயது பெண், ஏவன் நதியின் நிலையை உலகிற்கு உணர்த்துவதற்காக ஒரு வித்தியாசமான முடிவை எடுக்கிறார். அதாவது, 2023 ஆம் ஆண்டு அவர் அந்த நதியை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவர் நதியை திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த பெண் நதியின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை முகாம் மீது தற்கொலை படை தாக்குதல்.. 30-க்கும் மேற்பட்டோர் பலி..

ஏவன் நதியை திருமணம் செய்தது முதலே அந்த பெண் தனது பெயரை ஏவன் மேக் என மாற்றம் செய்துக்கொண்டுள்ளார். தன்னை அந்த நதியின் மனைவியாக முன்னிறுத்தி வரும் அந்த இளம் பெண், தற்போது அந்த நதிக்காக சட்டபூர்வமாக போராடி வருகிறார். அதற்காக அவர் ஒரு புது இயக்கத்தையும் தொடங்கியுள்ளார். இந்த முயற்சியில் அவர் மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.