அழகே அழகு சீரியலின் தைரியமான ஹீரோயினாக இருக்கும் மதி கடந்த சில எபிசோட்களாகவே அழுகையுடன் இருப்பது பார்ப்பதற்கு பலருக்கும் கடுப்பையே ஏற்படுத்துகிறது.
மதி தன்னுடைய கல்லூரியில் பரபரப்பாக கிளாஸ் எடுத்து கொண்டு இருக்கிறார். அவர் மாணவர்கள் இன்னைக்கு உங்களுக்கு கன்பார்ம் அகிடும்ல மேம். செலிபிரேஷன் எல்லாம் ப்ளான் செஞ்சி இருக்கோம் என சந்தோஷமாக பேசுகின்றனர்.
மதியும் வேலை கன்பார்ம் ஆகும் என்ற சந்தோஷத்தில் இருக்கிறார். அதை போல பிரின்சிபாலும் மதியை அழைத்து ஒரு லெட்டரை கொடுக்கிறார். அவர் சந்தோஷத்தில் இருக்க உங்க வேலையை கன்பார்ம் செய்ய முடியாது. இப்போ பார்த்து கொண்டு இருக்கும் வேலையில் இருந்தும் விடுவிக்கிறேன் என்கிறார்.
இதில் மதி உடைந்து விடுகிறார். அழுது கொண்டு இருக்க அப்போது ரேவதி மற்றும் மலர் க்ரூப் ஓபன் செய்து அதில் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மதி அமைதியாக அதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஒருகட்டத்தில் அழுதுக்கொண்டே தன்னுடைய வேலையில் நடந்த விஷயம் குறித்து சொல்கிறார். இதில் ரேவதி மற்றும் மலர் இருவரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர். மாற்றி மாற்றி கால் செய்து பார்க்க மதி எடுக்காமல் விட்டு விடுகிறார்.
ஒருகட்டத்தில் மலர் கால் செய்து சுரேஷிடம் மதியை சென்று பார்க்க முடியுமா எனக் கேட்கிறார். நீ ப்ரீயா இருந்தா போய் மதியை காலேஜில் பார்த்துவிட்டு வா எனக் கூறிவிடுகிறார். மதியும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்ப தயாராகிறார். தங்கராஜ் ப்ளான் சக்ஸஸ் ஆனாலும் மதியின் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.