அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
ராகேஷ் தாரா July 15, 2026 12:44 AM

நடிகர் தனுஷ் அடுத்ததாக 'லப்பர் பந்து' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக D56 என அழைக்கப்படும் இந்தப் படத்தின் முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாயகி தேர்வு தொடர்பான தகவல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திரையுலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, இந்தப் படத்திற்கு 'லப்பர் பந்து' திரைப்படத்தில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை நாயகியாக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், நடிகர் தனுஷ் இந்தக் கதாபாத்திரத்திற்கு மமிதா பைஜூ மிகவும் பொருத்தமாக இருப்பார் என விருப்பம் தெரிவித்ததாகவும், இறுதியில் அவரையே ஒப்பந்தம் செய்யும்படி வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமான 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு தமிழரசன் பச்சமுத்து இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. D56 படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழு மற்றும் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். பான் இந்திய அளவில் உருவாகும் இந்தப் படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருவதாகவும், 2026 அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த 'காரா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதில் மமிதா பைஜூவின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது

'பிரேமலு' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மமிதா பைஜூவின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விஜய்யின் 'ஜன நாயகன்', சூர்யாவின் 'விஷ்வநாத் & சன்ஸ்', பிரதேப் ரங்கநாதனுடன் புதிய படம், தற்போது தனுஷுடன் D56 என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருவதால், தமிழ் சினிமாவின் பிஸியான இளம் நடிகைகளில் ஒருவராக மமிதா பைஜூ உருவெடுத்துள்ளார்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.