தமிழக அரசியல் வரலாற்றில் என சொல்லுவதை விட உலக அரசியல் வரலாற்றில் நடந்திடாத ஒரு திருப்பமாக 2 வருடங்களுக்கு முன்பாக கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள கட்சி என்றால் அது தவெக. ஆம்... விஜய் என்ற ஒற்றை நபருக்காக தமிழக மக்கள் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர். இதனால் வரலாற்றில் இல்லாத வெற்றியை தவெக பெற்றுள்ளது.
அதிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், அந்த கட்சிகளை பின்னுக்கு தள்ளி வெற்றி வாகை சூடியுள்ளது தவெக. இந்த நிலையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அறிவித்த ஒவ்வொரு திட்டங்களையும் தற்போது செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் சிங்கப்பெண் சிறப்பு பாதுகாப்பு படை, 200 யூனிட் இலவச மின்சாரம், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தனது முதல் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தவெக என்ற கட்சியை தொடங்கி இரண்டு வருடங்களில் ஆட்சியை பிடித்துள்ள முதலமைச்சர் விஜய், அடுத்ததாக பிரதமர் பதவியை குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில், முதலமைச்சர் விஜய் தொடர்பாக பல்வேறு உண்மை கலந்த பொய் செய்திகள் வட மாநிலங்களில் வேகமாக பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
insta வழியாக அனைத்து மாநிலங்களிலும் விஜய் செய்த சாதனைகள் என பல செய்திகள் பரவ செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய் முதல்வராக வந்த 62 நாட்களில் எலக்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ் நாடு முதல் இடத்திற்கு வந்துவிட்டதாகவும், சுமார் 42% மொத்த இந்திய நாட்டின் ஏற்றுமதியில் தமிழகம் தான் முதல் இடம் என ரீல்ஸ்கள் கொடி கட்ட பறந்து வருகிறது. அடுத்தாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தால் பில் கட்ட தேவை இல்லை என விஜய் அறிவித்திவிட்டதாகவும், பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டை விதிக்க விஜய் உத்தரவிட்டதாகவும் செய்தியானது பரப்பப்பட்டு வருகிறது. மேலும் விஜய் முதல்வராக வந்த பின் பிளாஸ்டிக் பாட்டில்கள் plastic recycling vending machine வைத்துக்க ஆணையிட்டுள்ளதாகவும், அதில் பாட்டிலை போட்டால் 5 ரூபாய் கிடைக்கும் என இது போன்ற ரீல்ஸ்களால் வட மாநிலங்களிலும் விஜய் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
எனவே முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், அடுத்ததாக பிரதமர் பணிகளை குறிவைத்து அதற்கான பணிகளை அவரது ஆதரவாளர்கள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2029ஆம் ஆண்டு தேர்தலில் தவெக துணையோடு பிரதமர் பதவியை பிடித்து விடலாம் என திட்டமிட்டுள்ள ராகுல் காந்திக்கு தவெக தரப்பு ஷாக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளையும் தட்டி தூக்க தமிழர் ஒருவரான விஜய் பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தவும் விஜய்யை முன்னோக்கி கொண்டு செல்லவும் தவெக தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.