நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) மலையாளம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து, தற்போது பான் இந்திய நடிகையாக பிரபலமாகியுள்ளார். இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Puthren) இயக்கத்தில், பிரேமம் (Premam) என்ற படத்தின் மூலம் நாயகியாக நுழைந்தவர் சாய் பல்லவி. இதற்கு முன் தமிழில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். சினிமாவில் இவருக்கு கதாநாயகியாக மிகவும் பிரபலத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது பிரேமம் தான். இந்த படத்தின் வெற்றியை அடுத்து தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். தமிழில் இவருக்கு கதாநாயகியாக அறிமுகம் தந்த படம் மாரி 2 (Maari 2). இதில் நடிகர் தனுஷுக்கு (Dhanush) ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்திற்கு பின் தொடர்ந்து தமிழிலும் நாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார். சூர்யாவுக்கு (Suriya) ஜோடியாக இவர் நடித்த தமிழ் படம்தான் NGK.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. கடந்த 2019ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்தில் சூர்யாவுடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் அவரது கண்கள் குறித்து சாய் பல்லவி பகிர்ந்திருகிறார்.
இதையும் படிங்க: பகவந்த் கேசரி ரீமேக்.. அந்த காட்சிகள் இன்னும் தொந்தரவு செய்ததாக முதல்வர் விஜய் சொன்னாரு – இயக்குநர் அனில் ரவிபுடி!
அந்த பேட்டியில் பேசிய சாய் பல்லவி, “இந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு அதிகமாக மன உளைச்சல் இருந்ததால், அவருடன் படத்தில் இருந்த நேரத்தையே என்னால் யோசிக்க முடியவில்லை. அப்படத்தில் பணியாற்றும்போது மிகவும் ஸ்ட்ரெஸ்-ஆக இருந்தேன். அதில் அவரை அடிக்கவேண்டும் அதுபோன்று எனது வேடம் இருக்கும்.
இதையும் படிங்க: தனுஷ் சாரை முதல் முறை பார்த்த தருணம் – சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!
படத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரமாகவே தான் இருப்போம், அப்போது அவர் என் கண்களுக்கு சூர்யா சாராக தெரியவில்லை. அவரை போட்டு அடி அடினு, அடிப்பேன் போட்டு. என்ன ஆனாலும், அவரின் கண்களில் இருக்கும் அழகு குறையவே இல்லை. அவருடைய கண்ணு ரொம்ப சாந்தமான கண்ணு என நான் நினைக்கிறேன். அவருடன் படத்தில் நடிக்கும்போதே, அவருடைய கண்கள் ரொம்ப சாந்தமாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்” என அதில் அவர் கூறியிருந்தார்.
சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)
நடிகை சாய் பல்லவி, பாலிவுட்டில் ஏக் தின் என்ற படத்தின் மூலம் நாயகியாக நுழைந்தார். தற்போது ராமாயணா படத்திலும் சீதையாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் தனுஷின் நடிப்பில் உருவாகிவரும் ஓம் படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் சாய் பல்லவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.