ஜன நாயகன் படத்தில் பிரகாஷ் ராஜின் கேரக்டர் அந்த நடிகர் நடிக்க வேண்டியது – இயக்குநர் சொன்ன விசயம்
TV9 Tamil News July 24, 2026 03:48 PM

தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருது வெளியான படம் ஜன நாயகன். இந்தப் படம் தளபதி விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியாகும் படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்த நிலையில் பல தடைகளை அனைத்தையும் தாண்டி நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் இயக்குநர் எச் வினோத் எழுதி இயக்கிய ஜன நாயகன் படம் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் படம் நன்றாக இருப்பதாக பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜின் கதாப்பாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த கதாப்பாத்திரம் குறித்து இயக்குநர் எச் வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜன நாயகனில் பிரகாஷ் ராஜின் கேரக்டர் அந்த நடிகர் நடிக்க வேண்டியது:

அந்தப் பேட்டியில் இயக்குநர் எச் வினோத் பேசியதாவது, நடிகர் பிரகாஷ் ராஜ் ஏற்ற கதாபாத்திரம் முதலில் நடிகர் சத்யராஜ் சாருக்காகவே திட்டமிடப்பட்டிருந்தது. அந்தக் கதாபாத்திரத்திற்கு சத்யராஜ் சார் அல்லது பிரகாஷ் ராஜ் சார் ஆகிய இருவரில் ஒருவரைப் பரிசீலித்து வந்தோம். சத்யராஜ் சாருக்குத் தேதிகள் தொடர்பான சிக்கல் இருந்ததால், இறுதியில் பிரகாஷ் ராஜ் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும் இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரத்திற்கு, ஆரம்பத்தில் பிரகாஷ் ராஜ் சாரைப் பரிசீலித்திருந்தோம். பூஜா ஹெக்டே படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில்தான் இதில் இணைந்தார். அவருடையது ஒரு சிறிய கதாபாத்திரம் என்றும் இயக்குநர் எச் வினோத் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெளியான ஜன நாயகன் படம் எப்படி இருக்கு? மக்கள் கொடுத்த ரிவியூ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dir HVinoth Recent

The role played by #PrakashRaj was initially intended for #Sathyaraj sir. We were considering either Sathyaraj sir or Prakash Raj sir for that character. Due to a date issue with Sathyaraj sir, Prakash Raj eventually took up the role.

For #GVM‘s character,… pic.twitter.com/uiv54NcWiB

— Movie Tamil (@_MovieTamil) July 24, 2026

Also Read… நேருக்கு நேர் முதல் கருப்பு படம் வரை… பர்த்டே பாய் சூர்யாவின் சினிமா பயணம் இதோ!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.