'ஜனநாயகன்' தியேட்டருக்கு வந்தாரா சங்கீதா….? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…. வெளியான தகவல்….!!
SeithiSolai Tamil July 24, 2026 05:48 PM

தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ நேற்றைய தினம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெகு விமரிசையாக வெளியானது. முதலமைச்சர் விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவே இறுதிப் படம் என்பதால் திரையரங்குகள் அனைத்துமே ரசிகர்கள் கூட்டத்தால் திருவிழாக்கோலம் பூண்டிருந்தன. அதேபோல, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் நேரில் காண பல திரைப் பிரபலங்களும் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

​இப்படித் திரையரங்குகளில் கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்டிக்கொண்டிருக்க, இணையத்தில் திடீரென ஒரு புதிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்திகள் பரவிவரும் சூழலில், அவரே நேரில் ‘ஜனநாயகன்’ படம் பார்க்க வந்ததாகக் கூறி அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவியது.

​இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பெரும் ஆச்சரியமும் எமோஷனலும் அடைந்து, அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக ஷேர் செய்யத் தொடங்கினர். ஆனால், சோஷியல் மீடியாவில் பரவும் இந்த வீடியோ உண்மையதானா என்பதைச் சரிபார்க்கும் முயற்சியில் உண்மை கண்டறியும் அமைப்புகளும் தீவிர நெட்டிசன்களும் உடனடியாக இறங்கினர்.

​அந்த வீடியோவை நுணுக்கமாக அலசி ஆராய்ந்தபோதுதான் மிகப்பெரிய உண்மை அம்பலமானது. ஆம், தற்போது வைரலாகும் அந்த வீடியோ நேற்று எடுத்ததே அல்ல. அது பல ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு திரைப்படத்தைப் பார்க்க சங்கீதா வந்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது மிகத் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

​இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வியூஸ்களுக்காகவும் லைக்குகளுக்காகவும் இதுபோல பழைய வீடியோக்களைத் தற்போதைய சூழலோடு இணைத்துப் பரப்புவது வழக்கமாகிவிட்டது. ‘ஜனநாயகன்’ ரிலீஸ் நேரத்தில் பரப்பப்பட்ட இந்த போலி வீடியோ ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதன் உண்மைத் தன்மை வெளியாகி வதந்திகளுக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.