H Vinoth: ஜன நாயகன் ரிலீஸோட ஸ்ட்ரெஸ் எல்லாம் முடிஞ்சிது – எச் வினோத் பேச்சு!
TV9 Tamil News July 24, 2026 07:48 PM

2026ம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த திரைப்படம் ஜன நாயகன் (Jana Nayagan). தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜய் (CM Vijay) இதில் நாயகனாக நடித்திருந்தார். இப்படமானது தளபதி 69 என கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டு, பின் இப்படத்தின் ஷூட்டிங்கும் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இதை இயக்குநர் எச். வினோத் (H Vinoth) இயக்க, தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார். இந்த படத்தில் தளபதி விஜய் முன்னணி நாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி ஏற்கனவே பீஸ்ட் படத்தில் இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் பிரச்சனையின் காரணமாக கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின், கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் ஜன நாயகன் படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு பின் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் எச்.வினோத் தனக்கு இருக்கும் மன நிம்மதி குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தில் பிரகாஷ் ராஜின் கேரக்டர் அந்த நடிகர் நடிக்க வேண்டியது – இயக்குநர் சொன்ன விசயம்

ஜன நாயகன் பட ரிலீசிற்கு பின் இருக்கும் மன நிம்மதி குறித்து எச்.வினோத்:

அந்த பேட்டியில் இயக்குநர் எச்.வினோத் பேசுகையில், “உண்மையிலே இது பெருமூச்சு தான், என்னுடைய ஸ்ட்ரெஸ் எல்லாமே ஒரு முடிவிற்கு வந்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் வரைக்கும் படம் எப்படி இருக்கும், மக்கள் இப்படத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள்?, நம்ம பண்ண அவங்களுக்கு பிடிக்குமா?, விஜய் சாரின் கடைசி படம் அதில் எந்த தவறும் வந்துவிட கூடாது என நான் நினைத்துக்கொண்டே இருந்தேன். எனக்கு பயமும் இருந்தது, நம்பிக்கையும் இருந்தது. உண்மையை சொல்லப்போனால் இப்படத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருந்தது. இப்படம் வெளியாகும் காலை வரையிலும் அதன் மீதான ஒரு சின்ன சபலம் இருந்தது.

இதையும் படிங்க: அந்த விசயத்திற்கு சூர்யா சார் சம்மதித்தது ஆச்சரியாமாக இருந்தது – இயக்குநர் வெங்கி அட்லூரி

ஆனால் இப்படம் வெளியான பிறகு, எனக்கு தொலைபேசியில் அழைக்காத நபர்கள் கூட அழைத்து வாழ்த்தினார்கள். எனக்கு இப்போது ரொம்பவே சாதாரணமாக இருக்கு, எல்லா மன கவலைகளையும் தொக்கி எரிந்தது போலவே இருக்கிறது. எனது மனம், உடம்பு எல்லாமே நிம்மதியாக இருக்கு, மேலும் நான் ரொம்பவே சந்தோஷயமாக இருக்கிறேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஜன நாயகன் படத்தின் வெளியீட்டிற்கு பின் இருக்கும் மன நிம்மதி பற்றி இயக்குநர் எச்.வினோத் பேசியது தொடர்பான பதிவு:

#HVinoth‘s post release interview:

My stress has came to end with #JanaNayagan release. I’m feeling its big relief for me now. Audience has loved the film & I’m feeling very Happy now.

I want to say one thing to @actorvijay – ‘Vijay Sir, naa kudutha Veliya correct ah panniten,… pic.twitter.com/VwamKlEHin

— AmuthaBharathi (@CinemaWithAB) July 24, 2026

ஜன நாயகன் திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவருகிறது. 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டிருந்த திரைப்படம் என்ற நிலையில், அதன் வசூலும் மிக பிரம்மாண்டமாக உள்ளது. இப்படம் இதுவரை கிட்டத்தட்ட ரூ 75 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.