“என் வாழ்க்கையின் மிக மோசமான பயணம்!”.. வழிமாறிச் செல்ல வற்புறுத்தி இளம் பெண்களை நடுவழியில் தவிக்கவிட்ட கொடூரம்.. வைரல் வீடியோ..!!!
SeithiSolai Tamil July 26, 2026 10:48 AM

உத்திரபிரதேசம் டேராடூன் பகுதியில் நடந்த ஒரு வாகன வாடகைச் சேவை தொடர்பான சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஜான்வி சௌத்ரி என்ற இன்ஸ்டாகிராம் உள்ளடக்க உருவாக்குநர் தனது தோழியுடன் இரவு நேரத்தில் ராபிடோ பைக் டாகசியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத துயரம் நடந்துள்ளது.

அப்போது வெளியில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், செயலியில் காட்டப்பட்ட சரியான வழியைப் பின்பற்றாமல் வேறு ஒரு மாற்று வழியில் செல்லுமாறு அந்த ஓட்டுநர் வற்புறுத்தியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Janvi Choudhary (@jnvchoudhary)