“பர்தடே ட்ரீட் ரெடி” தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் 'ஓம்' ஃபர்ஸ்ட் சிங்கிள்…. கொண்டாட்டத்தில் வெறியான தனுஷ் ஃபேன்ஸ்….!!
SeithiSolai Tamil July 26, 2026 07:48 PM

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ், மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடிக்கும் பிரம்மாண்டத் திரைப்படமான ‘ஓம்’ குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

​தனுஷ் மற்றும் மம்மூட்டி முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் என்பதால், இப்படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. அதோடு ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதால் இதற்கான ஹைப் பலமடங்கு உயர்ந்துள்ளது.

​இந்நிலையில், தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியாகவுள்ள இந்த முதல் பாடல், இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடலின் வெளியீட்டுத் தேதியைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.