அஜித் குமாரின் 64-வது படத்தின் மொத்த பட்ஜெட் இதுவா? வைரலாகும் தகவல்
TV9 Tamil News July 27, 2026 11:48 PM

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் அஜித் குமார் அவரது கார் ரேஸிங்கிலும் தொடர்ந்து அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். தொடர்ந்து நடிப்பு கார் ரேஸ் என இரண்டிலும் பிசியாக வலம் வரும் அஜித் குமார் பல நாடுகளில் நடைப்பெற்று வரும் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் தனது 64-வது படத்திற்கும் இறுதிப் படமான குட் பேட் அக்லி படத்தை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்தார். தொடர்ந்து தயாரிப்பாளர் பிரச்சனை இருந்து வந்த நிலையில் படத்தை அஜித் குமாரே தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் அஜித் குமாரின் 64-வது படம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அஜித் குமாரின் 64-வது படத்தின் மொத்த பட்ஜெட் இதுவா?

அஜித் குமாரின் சம்பளத்தைத் தவிர்த்து, ‘AK 64’ திரைப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 100 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது; அதேவேளையில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்திற்காகப் பிரபல கதாநாயகன் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்தில் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படத்தை அஜித்தின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, ஷாலினி அஜித் குமார் வழங்குகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான ஒரு பிரம்மாண்டமான கமர்ஷியல் திரைப்படமாக இது உருவாகிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read… துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஸ்ரீ ஸ்ரீ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

BUZZ – #AK64’s budget, excluding #AjithKumar’s salary, is itself ₹100 crore.#Mohanlal has been approached for an important character role, while another prominent hero is also being approached for another key character.

Full-fledged shooting is set to begin in September.… pic.twitter.com/zDXh9FvOA5

— Movies Singapore (@MoviesSingapore) July 26, 2026

Also Read… ஸ்ரீதேவியின் அருகே இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா? பிரபல ஹீரோவின் மனைவி இவர்!!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.