தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் சினிமாவில் தனது பயணத்தை இசையமைப்பாளராக தொடங்கி இருந்தாலும் தற்போது தொடர்ந்து நாயகனாகவும் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக தெலுங்கு மொழியிலும் அதிக அளவில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து பிசியன இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் படங்களில் நாயகனாக நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஹேப்பி ராஜ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் மட்டும் இன்றி ஓடிடியில் வெளியான போது மற்ற மொழி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் ஹேப்பி ராஜ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடித்து உள்ள படம் இம்மார்டல். இந்தப் படத்தை இய்க்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகை கயடு லோஹர் நாயகியாக நடித்து உள்ளார்.
இம்மார்டல் படலத்திலிருந்து வெளியானது இரண்டாவது சிங்கிள்:இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த இம்மார்டல் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து தற்போது இரண்டாவது சிங்கிள் வெளியாகி உள்ளது. ஷீ இஸ் மை செல்லகுட்டி என்ற பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை பாடகர் ஆதித்யா பாடியுள்ள நிலையில் சாம் சி.எஸ்., தமிழ் ஆதவன் ஆகியோர் இணைந்து அந்தப் பாடலை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… தனுஷ் கிட்ட அத அப்பவே சொன்னேன் – நித்தியா மேனன் பகிர்ந்த விஷயம்!
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:#SheIsMy, the second single from #Immortal is out now https://t.co/pfKQHYGxDJ
A @samcsmusic Musical
Starring : @gvprakash & @11Lohar
Produced by: @arun_kumaroffl @AKfilmfactory
Directed by: @DirMari_Chinna@SamCSmusic #Rajesh @gopiprasannaa @Arunkrishna_21 @stuntsaravanan… pic.twitter.com/kIMmqYEcjL— Think Music (@thinkmusicindia) July 27, 2026
Also Read… தொடங்கியது சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்