தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ராஜேஷ். தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் காமெடி பாணியில் படங்களை இயக்குவதில் ரசிகர்களிடையே பிரபலமான இவர் கடந்த 2007-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, மிஸ்டர் லோக்கல் என பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் ப்ரதர். இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் அடுத்ததாக தற்போது இயக்கி உள்ள படம் ஜாலியா இருந்த ஒருத்தன்.
ஜாலியா இருந்த ஒருத்தன் பட ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:இந்த நிலையில் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்து உள்ளார். இவர் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நாயகியாக நடிகை இவான நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து பரிதாபங்கள் சுதாகர் நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் தமிழ் நாட்டு ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… OM Movie: ரசிக்கிற கண்ணான கண்மணியே… தனுஷின் ஓம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அலாக்கா லோவா’ வெளியானது!
ஜாலியா இருந்த ஒருத்தன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:We are extremely happy and proud to announce that the prestigious @agscinemas has acquired the Tamil Nadu theatrical rights for #JolliyaIrunthaOruthan! 🍿🎟️🔥
SOON IN CINEMAS
Produced by @malikstreams #datoabdulmalik
Co Produced by @Razikahamed16Starring @jiivaofficial
A… pic.twitter.com/12TyjGKpZW
— Malik Streams Corporation (@malikstreams) July 29, 2026
Also Read… 4-ம் கட்ட படப்பிடிப்பில் மெண்டல் மனதில் படம் – வைரலாகும் செல்வராகவன் போட்டோ