நெல்லை || பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 2 ஆசிரியர்கள் கைது.!
Seithipunal Tamil September 13, 2024 09:48 AM

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. 

இந்தப் புகாரின் படி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், தற்காலிக ஆசிரியர் ராபர்ட் மற்றும் நிரந்தர ஆசிரியர் நெல்சன் உள்ளிட்டோர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து நெல்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ராபர்ட் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இரு ஆசிரியர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.