இந்நிலையில் இன்று பாலமேட்டிலும், நாளை அலங்காநல்லூர் என்று அடுத்தடுத்து நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 8,000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் 10,000க்கும் மேற்பட்ட காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான இளைஞர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்தனர். காளையின் மருத்துவச் சான்றிதழ், காளையின் படம், உரிமையாளர் மற்றும் உதவியாளருடன் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் ஜல்லிக்கட்டு காளையை துன்புறுத்தாமல் விதிகளுக்கு உட்பட்டு போட்டியில் கலந்துக் கொள்வோம் என்ற உறுதிமொழி அளித்த பின்னரே முன்பதிவு செய்யப்பட்டது.
இதே போன்று மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவில் மாடுபிடி வீரரின் கைபேசி எண் , ஆதார் எண், பெயர், வயது, முகவரி இவைகளை பதிவேற்றம் செய்த பின்னர் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் இன்று ஜனவரி 15ம் தேதி பாலமேட்டிலும், நாளை ஜனவரி 16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற காளைகள் இந்த இரு போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. அதே சமயம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!