உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் ஆஷிஷ்- பிரியங்கா சர்மா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விடுமுறையில் ஆஷிஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் பிரியங்கா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரியங்காவின் தந்தை சத்ய நாராயணன் சர்மா தனது மகளை ஆஷிஷ் கொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தனது மருமகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்துள்ளது. திருமணம் ஆனதிலிருந்து பிரியங்காவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆஷிஷ் துன்புறுத்தியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.