நடிகை வரலட்சுமியின் கணவரை தன் குடும்பத்தோடு சேர்த்துக் கொள்ளாத நடிகர் சரத்குமார்….. வீடியோ வைரல்….!!!
SeithiSolai Tamil January 15, 2025 09:48 PM

நடிகை வரலட்சுமி சரத்குமார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்றது. அதன் பின்னர் சில நிகழ்ச்சியில் மட்டுமே வரலட்சுமி கலந்து கொண்டார். கடந்த ஆண்டு தல தீபாவளியை நடிகை வரலட்சுமி, தனது கணவருடன் சென்னையில் கொண்டாடினார். அதேபோன்று நேற்று தல பொங்கலையும் நடிகை வரலட்சுமி தனது குடும்பத்துடன் கொண்டாடினார்.

அப்போது சூரியவம்சம் படத்தில் வரும் ஒரு காட்சியை அவர், தனது குடும்பத்துடன் ரீகரியேட் செய்துள்ளனர். அதாவது எல்லாரும் வந்துட்டாங்களா என்று ஒருவர் கேட்க, ராதிகா ஏங்க சின்ராசு என்று கூறுகிறார். அதற்கு சரத்குமார் எங்க குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு சீக்கிரம் எடு என்று கூறுகின்றார். அப்போது மாப்பிள்ளை நிக்கோலாய் சச்தேவ் பாவமாக ஓரமாக நிற்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.