இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் மூன்றாவது மாதத்தில் வரகூடிய முகமது நபியின் பிறந்தநாள் விழா மிலாது நபியாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி ஒவ்வொரு வருடமும் தமிழக அரசால் பொதுவிடுமுறை விடப்படுகிறது.
அந்த வகையில், இந்த வருடம் வருகிற 16-ந்தேதி மிலாது நபி விழாவை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது விடுமுறை தேதி மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை அரசு பிறபித்து இருந்ததை தொடர்ந்து, தற்போது பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மாற்றுத் தேதி குறித்த தகவலை அனுப்பியுள்ளார்.
அதன்படி, ஏற்கனவே 16-ந்தேதி பொது விடுமுறையாக இருந்ததை, 17-ந்தேதிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.