முஸ்லிம்கள் தொழுகை மேற்கொள்ளும் நேரத்தில் துர்கா பூஜை வழிபாடு செய்பவர்கள் இதையெல்லாம் செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் தினந்தோறும் ஐந்து வேளை தொழுகை நடத்தி வரும் நிலையில், வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தாமாமல், துர்கா பூஜை வழிபாடு மேற்கொள்பவர்கள், தங்களது வழிபாட்டில் இசைக் கருவிகள் மற்றும் ஒலி எழுப்பும் சாதனங்களை இசைக்காமல் அணைத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பூஜை நடத்தும் குழுக்கள் இதனை ஏற்றுக் கொண்டதாக உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எம்.டி ஜஹாங்கிர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், தொழுகை தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஒலி எழுப்பும் சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் துர்கா பூஜையை வங்கதேசத்தில் உள்ள இந்துக்களும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். தற்போது வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்டு, ராணுவ உதவியுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில், சிறுபான்மையினரான இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களில் 32,666 சிலைகளை வைத்து, பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா பூஜை கொண்டாடப்பட உள்ளதாக ஜஹாங்கிர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார். மேலும், பூஜை நடைபெறும் இடங்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தடையின்றி விழா நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா