தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிக்காகோ ஆகியவர்களுக்கு சென்றார். அங்கு 16க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் 7000 கோடிக்கும் மேற்பட்ட பிரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்நிலையில் அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்த முதல்வர் ஸ்டாலின் இன்று சிக்காகோவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அவரை அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் வழி அனுப்பி வைத்தனர்.
அமெரிக்கா சென்ற போது விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து அமெரிக்கவாழ் இந்தியர்கள் அவரை வரவேற்றனர். இதே போன்ற தற்போது முதல்வர் ஸ்டாலினை மிகவும் மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அமெரிக்காவிலிருந்து கிளம்பும் முதல்வர் ஸ்டாலின் நாளை மாலை சென்னை வருவார். மேலும் அமெரிக்காவுக்கு 17 நாட்கள் அரசு முறை பயணமாக சென்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மொத்தம் 7516 கோடி மதிப்பிலான புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.