பள்ளிக்கு வந்த முதல் நாளே 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. ரகசிய கேமிராவில் சிக்கிய ஆசிரியை!
A1TamilNews September 13, 2024 12:48 PM

பிரான்சில் பள்ளிக்குச் சென்ற முதல் நாளே 3 வயது சிறுமியை ஆசிரியை ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென ஆசிரியர்களுக்கு இப்போதெல்லாம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இருப்பினும், பள்ளிக்கு வந்த முதல் நாளே, 3 வயது சிறுமியை ஆசிரியை ஒருவர் தாக்கியுள்ளார்.

குழந்தையை அந்த ஆசிரியை அடித்ததில், அந்தக் குழந்தை கீழே விழுந்திருக்கிறாள். அவள் கீழே விழுந்து அம்மா, அம்மா என கதறியும், அந்த ஆசிரியை அந்தக் குழந்தையைப் பார்த்து தொடர்ந்து சத்தமிட்டுள்ளார். இந்தக் காட்சியை, மற்றொரு குழந்தையின் தாய் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

அந்த காட்சிகளை சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள அந்தக் குழந்தையின் வக்கீல், அது குழந்தையை கண்டிப்பதற்காக அடிப்பது கூட அல்ல, அது தாக்குதல் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விசயம் வெளியானதும் விடுப்பு எடுத்துச் சென்று அந்த ஆசிரியை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்சில், 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைத் தாக்குவது, சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.