Quarterly Exam Holidays: தொடங்கிய காலாண்டுத் தேர்வு; விடுமுறை, பள்ளிகள் திறப்பு எப்போது?
மாய நிலா September 21, 2024 12:14 AM

தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் மாநிலக் கல்வித் திட்டத்தில் படிக்கும் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (செப்டம்பர் 20) காலாண்டுத் தேர்வு தொடங்கி உள்ளது. இந்தத் தேர்வு 27ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

முதன்முதலாக தமிழ் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து நாளை (செப்.21) உடற்கல்வி தேர்வும் 23ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெற உள்ளது. அதை அடுத்து செப்.24 விருப்பப் பாடமும்  25ஆம் தேதி கணிதத் தேர்வும் நடக்கின்றன. செப்டம்பர் 26ஆம் தேதி அறிவியல் தேர்வும் 27ஆம் தேதி சமூக அறிவியல் பாடமும் நடக்க உள்ளது.  

காலாண்டு தேர்வு அட்டவணை

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு செப்டம்பர் 19 தொடங்கி 27 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு எப்படி?

கடந்த 2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கியது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கியது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கடந்தாண்டு, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11, 12ஆம் வகுப்புகளுக்கும் டிசம்பர் 11ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கியது. அதேபோல டிசம்பர் 13ஆம் தேதி 6 - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!

பள்ளிகள் திறப்பு எப்போது?

தேர்வுகள் அனைத்தும் முடிந்ததுமே, வருகிற சனிக்கிழமை முதல் அதாவது, செப்.28ஆம் தேதி முதல் அக்.2ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் அதாவது, செப்டம்பர்- 21, 28, அக்டோபர்- 5, 19, 26, நவம்பர் - 9, 23 ஆகிய தேதிகளில் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.